Sunday, 5 February 2012

பதினெட்டு வயசு ஆணவங்களுக்கான படங்கள்


வார்னிங்: இந்த பதிவு பதினெட்டு வாயசு அனவங்களுக்கு மட்டும். மத்தவங்கலுக்கு இப்ப தேவையில்லாதது. மீறி படிச்சா நான் பொருப்பு கெடையாது.

Tuesday, 31 January 2012

ஜாக்கிசான் அனுப்பிய வாசகர் கடிதம்



நேத்து நைட் மொக்கை போட யாருமே இல்லையேன்னு மொட்டை மாடிக்கு போய் காத்து வாங்கலாம்னு நெனச்சேன். வீட்டுக்காரங்க சொன்னாங்க நம்ம வீட்ல மாடியே இல்லையே அப்புறம் எப்படி மொட்டை மாடி இருக்கும்? அப்டீன்னு. சரின்னு சொல்லிட்டு கம்ப்யூட்டர தொறந்து பாத்தேன். அப்டியே நான் ஷாக் ஆயிட்டேன்.

நம்ம ஜாக்கி அண்ணேன் ஈமெயில் போட்டிருந்தாப்ல. அட! நம்ம ஊரு ஜாக்கி அண்ணே இல்லைங்க. சிரிச்சு சிரிச்சு சண்டை போடுவாப்ளல? அந்த ஜாக்கி அண்ணன்.  அவர் அனுப்புன மயிலை நீங்களும் படிச்சு பாருங்க.


亲爱的牟尼
我看从天上
我不知道多久会带我回家
我等待了一个小时左右,在传送带
我有一个香烟来打发时间
造成交通的地狱

我不希望任何更
当你打开车门时,比看到你的脸
你会让我豆吐司和一杯漂亮的茶
我们将得到一个中国,看电视
明天,我们将采取的狗散步
并于当天下午那么也许我们将讨论
用尽,所以可能会
我们将得到一个中国,看电视

你擦眼泪从我的眼睛
你说,它需要的是一个电话
我哭了孤独的思想,然后
我不知道多久将采取TIL我回家

我不希望任何更

当你打开车门时比看到你的脸
你会让我豆吐司和一杯漂亮的茶
我们将得到一个中国,看电视
明天,我们将采取的狗散步
并于当天下午,那么也许我们将讨论
我会用尽,所以我可能会睡
我们将得到一个中国,看电视

我知道这似乎不那么公平
但我会向您发送一张明信片,当我到达那里

我不希望任何更
当你打开车门时比看到你的脸
你会让我豆吐司和一杯漂亮的茶
我们将得到一个中国,看电视
明天,我们将采取的狗散步
并于当天下午,那么也许我们将讨论
我会用尽,所以我可能会睡
我们将得到一个中国,看电视

ஐ தின்க் திஸ் இஸ் தெலுங்கு இல்லைனா கன்னடம். எனக்கு மீனிங் தெரிலன்னு இன்னொருத்தர்கிட்ட கேட்டேன். அவர் எனக்கு தமிள்ல சொன்னது என்னன்னா 

அன்புள்ள மொக்கை முனி அவர்களுக்கு,

நேத்து ஒங்க ப்ளாக்கை பாத்தேன். ரொம்ப நல்ல இருந்துச்சு. ஒங்களுக்கு மயில் ஒன்னை பரிசா கொடுக்கலாம்னு ஆச இருந்துச்சு. ஆனா அது வழில பறந்து போயிடும்னு சொல்லிட்டு அதுக்கு பதிலா மெயில் அனுப்புறேன். 

ஒங்க போன பதிவ படிச்சதும் எனக்கும் ப்லாக் ஆரம்பிக்கலாம்னு ஆச வந்துடுச்சு. ஆனா ஒங்க அளவு எழுத முடியுமான்னு தெரில. அதனால அந்த ஆசைய கால்விட்டுட்டேன்.

தமில் மக்களை என்கு ரொம்ப பிடிக்கும். எங்க ஊர் படத்துக்கு அவங்க வைக்குற பேர பாக்கும் போதெல்லாம் என்கு சிப்பு சிப்பா வரும். அவங்களுக்கு தான் எவ்ளோ ரசனை? இப்ப கூட போதிதர்மன்னு படம் வர்தாம்ல? நம்ம ஜெட்லி தம்பி தான் நடிச்சிருக்காரு. நீங்களும் ஒரு தடவ பாருங்க.

அடுத்த தபா ஒங்க ஊருக்கு வரம் பொது ஒங்கள அவசியம் நான் பாக்குறேன். கால்சூட் கொடுக்க மாட்டேன்னு அடம்பிடிக்க கூடாது. மனியாயிடுச்சு அதனால அதிகமா எழுத முடில. சச்சின் நூறு போடுரதுக்குள்ள நீங்க நூறு பதிவு போட வாழ்த்து சொல்லி நான் கெளம்புறேன். 

நன்றி!


இத படிச்சதும் மீ க்ரையிங். நோ நோ திஸ் இஸ் ஆனந்த கண்ணீர். நம்மளையும் மதிச்சு இவ்ளோ பெரிய கடுதாசி அனுப்பிருக்காறேன்னு நானும் பெருசா பதில் போட்டேன்.

அன்புள்ள ஜாக்கி,

நன்றி!


ஸ்ஸ்ஸ்ஸ்......அப்பப்பா........ இத எழுதுரதுக்குள்ள ஒரு மணி நேரம் ஆயிடுச்சு. ஏன்னா ஜாக்கி அண்ணனுக்கு எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதனும்ல? அதான்.

**********************************************************************************************************************

இது மாதிரியும் நீங்களும் எனக்கு mokkaimuniyandi@gmail.com என்ற அட்ரசுக்கு கடுதாசி போடலாம். நல்ல இருக்குற கடுதாசியை இந்த ப்ளாக்ல இலவசமாக எழுதி காட்டப்படும்.

***********************************************************************************************

Bean-நவீன-த்தூ-வம்: வானத்துல ஒரு கோடி நட்சத்திரம் இருக்குன்னு சொன்ணா உடனே நம்பிடுவான். ஆனா பர்ஸ்ல பணம் இல்லைனா பர்சை காட்டுனா தான் நம்புவான். இதான் மனுச குணம்.



என்னிக்குமே கொலைவெறியுடன்

மொக்கை முனி!


Sunday, 29 January 2012

பிரபல பதிவர் ஆவது எப்படி?

தமிழ்நாட்டில் எல்லோருமே பதிவர்கள்தான்னு பிரபல பதிவர் சொல்லிருகாறு. ஆனா நாம எல்லா பதிவர்களும் பிரபலமாவது எப்படின்னு இங்க பாக்கபோறோம். என்ன எல்லாரும் ரெடியாயிட்டீன்களா? நான் சொல்ல சொல்ல நீங்க நோட்ஸ் எடுத்துக்கோங்க. அப்டியே கால்ல சாக்ஸ் போட்டுக்கோங்க. சாக்ஸ் எதுக்கா? சூ போடத்தான். சூ எதுக்கா? பதிவை படிச்சிட்டு கம்ப்யூட்டர் மேல வீசி எரிய தான். அதான இப்ப பேசன்?

சரி நாம குவாட்டருக்கு வருவோம். யாருக்கெல்லாம் பிரதமர் ஆகணும்னு ஆசை இருக்கோ அவங்கெல்லாம் கை தூக்குங்க. யாருக்குமே ஆசையிள்ளயா? என்னாது? ஏற்கனவே வீட்ல அப்டிதான் இருக்கீங்களா?

ஒ. கொஸ்டீன் மாத்தி சொல்லிட்டேனா? மன்னிச்சு. 

யாருக்கெல்லாம் பிரபலம் ஆகணுமா அவங்கெல்லாம் கை தூக்குங்க?

அட, எல்லாருக்குமே ஆச இருக்கா? சரி, ப்ராப்ள பதிவர்....... சாரி பிரபல பதிவர் ஆவதற்கு செய்ய வேண்டிய கருமங்கள்.... மறுபடியும் மன்னிச்சு... காரியங்கள்

1.   நீங்க பிரபல பதிவர் ஆகணும்னா அதுக்கு மொதல்ல பதிவர் ஆகணும். இது ரொம்ப ரொம்ப முக்கியம்.

2.   நாம உண்டு நம்ம வெட்டி வேலை உண்டுன்னு பதிவு எழுத கூடாது. பயபுள்ள ஒருத்தனும் மதிக்க மாட்டாய்ங்க. அதனால யாரையாச்சும் திட்டி உள்குத்து வெளிக்குத்து நேர்குத்து கும்மாங்குத்து பதிவா போடனும். அப்ப தான் ஹிட் கிடைக்கும்.

3.  உள்குத்து பதிவு போடறப்ப யாராவது நாம யாருக்கு உள்குத்து போட்டிருக்கோம்னு கண்டுபிடிச்சாலும் இல்லைன்னு சாதிக்கணும். (ஆனா கடைசில ஆரு மனசுல ஆருன்குற மாதிரி உண்மையை கண்டுபுடிச்சிடுவாங்க. அத கண்டுக்காதீங்க)

4.  நாம யாரை திட்டி பதிவு போட்டோமா அவங்க ப்லாக்லேயே போய் "நல்ல எழுதிருக்கீங்க நன்றி" அப்டீன்னு கொம்மென்ட் போடணும்.

5.  நீங்க உடனே பேமஸ் ஆகணும்னா நல்லா இருக்குற ரெண்டு கூட்டத்தை கலைக்கிற மாதிரி பதிவு எழுதணும். பார் எக்சாம்பிள் ரெண்டு மதத்துக்காரங்க இல்லைனா ரெண்டு நாட்டுக்காரங்கள. அவங்க ரத்தமெல்லாம் சூடாகுற மாதிரி பதிவு போடனும். 

6.  அவங்க நல்ல சண்டை போடும் பொது "சண்டையை ஆரம்பிச்சது அவங்க தான்" அப்டீன்னு நல்லபுள்ள கொம்மென்ட் போடனும். அதையும் நம்புரதுக்கு நெறைய அப்பாவிங்க இருக்காங்க.

7.  ரெண்டு மூணு நாள் ஆயியும் சண்டை நிக்களைன்னா "மன்னிச்சு. பிரச்சனை வேணாம். சமாதானம்" அப்டீன்னு சொல்லி அதை முடிச்சிட்டு இன்னொரு சண்டையை ஆரம்பிக்கணும். இப்படி வாரம் ரெண்டு சண்டையை மூட்டினா தான் நாம நிம்மதியா தூங்க முடியும்.

8. எப்போதும் சண்டை போட்டா யாரும் வர மாட்டாங்க. அதனால அசிங்க அசிங்கமா தலைப்பு போட்டு ஆபாசமா நிறைய பதிவு எழுதணும். அப்ப தான் வருவாங்க. யாராச்சும் கேட்டாங்கன்னா "பதிவுல அசிங்கம் இல்ல. ஒங்க மனசுல தான் இருக்கு"ன்னு பிளேட்டை மாத்திடனும்.


இன்னும் நிறைய ஐடியாக்கள் இருக்கு. ஒன்னொன்னா சொல்லி தாரேன்.

ஐடியாக்கள் அபாயம்: அண்ணன் தூள் நட்சத்திரம்

************************************************************************************

Bean-நவீன-த்தூ-வம்: மசாலா போட்டு வறுத்தால் மசாலா வடை கிடைக்கும். ஆனால் ஆமையை போட்டு வறுத்தால் ஆமைக்கறி தான் கிடைக்கும், ஆமை வடை கிடைக்காது.


என்னிக்குமே கொலைவெறியுடன்

மொக்கை முனி!

Saturday, 28 January 2012

ஓடிடுங்க அவன் வந்துட்டான்


ஓடிடுங்க ஓடிடுங்க அவன் வந்துட்டான்

யார்டா வந்துட்டா?

அதாங்க அவன்தான்

அவன்னா யாருடா? சொல்லிட்டு போடா

அவன்தாங்க மொக்கை முனியாண்டி

மொக்கை முனியான்டியா? அது யார்டா?

ஐயோ! ஒங்களுக்கு அவன பத்தி தெரியாது. நிக்காதீங்க ஓடிடுங்க!

நான் ஏன்டா ஓடணும்? சொல்லிட்டு போடா!

ஒங்களுக்கு சொன்னா புரியாது. அவன் ரொம்ப தொல்லைபுடிச்சவன். இதுவரைக்கும் எல்லாரோட பிளாக்கையும் படிச்சிட்டு இருந்தான். இப்ப பிளாக் ஆரம்பிக்க போறான்.  நிக்காதீங்க ஓடிடுங்க!

அவன் ஆரம்பிச்ச நான் ஏன்டா ஓடணும்? அப்படி என்ன எழவடா அவன் அழுத போறான்?

சரி அவன பத்தி சொல்றேன். ஆனா நான் தான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்க.

நான் யார்டடா சொல்லுவேன். மொதல நீ அவன பத்தி சொல்லுடா

அவன் பேரு முனியாண்டி. ஆனா அவன் மொக்கை முனியான்டின்னு அவனே அவனுக்கு பேர் வச்சுட்டான். நம்ம சாம் மார்த்தாண்டன், பிரபல பதிவர், சாம் ஆண்டர்சன் இவங்கள பாத்துட்டு நானும் அவங்கள போல பிரபலமாகனும்னு சொல்லிட்டு பிளாக் ஆரம்பிக்க போறேன்னு கிளம்பிட்டான். ஒரு மாசமா "ஹிட்டு பதிவு கிறுக்குவது எப்படி?" ங்குற புக்கை படிச்சிட்டு இருந்தான். இப்ப தான் படிச்சி முடிச்சான். அவன் பதிவு எழுதுரதுக்குள்ள ஓடிடுங்க நிக்காதீங்க.

அடச்சே! இந்த ஏலவுக்குதான் இந்த பில்டப்பா? நான் ஏதோ சொரைக்காய்ல உப்பு இல்லையோன்னு நெனச்சேன். என்கேருந்துடா கெளம்பி வர்றாங்க இவனுங்க. இருக்குற மொக்கைங்க பத்தாதுன்னு இவன் வேற.

பாப்போம் இவன் என்ன கிலிக்கிரான்னு.