Saturday, 28 January 2012

ஓடிடுங்க அவன் வந்துட்டான்


ஓடிடுங்க ஓடிடுங்க அவன் வந்துட்டான்

யார்டா வந்துட்டா?

அதாங்க அவன்தான்

அவன்னா யாருடா? சொல்லிட்டு போடா

அவன்தாங்க மொக்கை முனியாண்டி

மொக்கை முனியான்டியா? அது யார்டா?

ஐயோ! ஒங்களுக்கு அவன பத்தி தெரியாது. நிக்காதீங்க ஓடிடுங்க!

நான் ஏன்டா ஓடணும்? சொல்லிட்டு போடா!

ஒங்களுக்கு சொன்னா புரியாது. அவன் ரொம்ப தொல்லைபுடிச்சவன். இதுவரைக்கும் எல்லாரோட பிளாக்கையும் படிச்சிட்டு இருந்தான். இப்ப பிளாக் ஆரம்பிக்க போறான்.  நிக்காதீங்க ஓடிடுங்க!

அவன் ஆரம்பிச்ச நான் ஏன்டா ஓடணும்? அப்படி என்ன எழவடா அவன் அழுத போறான்?

சரி அவன பத்தி சொல்றேன். ஆனா நான் தான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்க.

நான் யார்டடா சொல்லுவேன். மொதல நீ அவன பத்தி சொல்லுடா

அவன் பேரு முனியாண்டி. ஆனா அவன் மொக்கை முனியான்டின்னு அவனே அவனுக்கு பேர் வச்சுட்டான். நம்ம சாம் மார்த்தாண்டன், பிரபல பதிவர், சாம் ஆண்டர்சன் இவங்கள பாத்துட்டு நானும் அவங்கள போல பிரபலமாகனும்னு சொல்லிட்டு பிளாக் ஆரம்பிக்க போறேன்னு கிளம்பிட்டான். ஒரு மாசமா "ஹிட்டு பதிவு கிறுக்குவது எப்படி?" ங்குற புக்கை படிச்சிட்டு இருந்தான். இப்ப தான் படிச்சி முடிச்சான். அவன் பதிவு எழுதுரதுக்குள்ள ஓடிடுங்க நிக்காதீங்க.

அடச்சே! இந்த ஏலவுக்குதான் இந்த பில்டப்பா? நான் ஏதோ சொரைக்காய்ல உப்பு இல்லையோன்னு நெனச்சேன். என்கேருந்துடா கெளம்பி வர்றாங்க இவனுங்க. இருக்குற மொக்கைங்க பத்தாதுன்னு இவன் வேற.

பாப்போம் இவன் என்ன கிலிக்கிரான்னு.

6 comments: