Sunday 29 January 2012

பிரபல பதிவர் ஆவது எப்படி?

தமிழ்நாட்டில் எல்லோருமே பதிவர்கள்தான்னு பிரபல பதிவர் சொல்லிருகாறு. ஆனா நாம எல்லா பதிவர்களும் பிரபலமாவது எப்படின்னு இங்க பாக்கபோறோம். என்ன எல்லாரும் ரெடியாயிட்டீன்களா? நான் சொல்ல சொல்ல நீங்க நோட்ஸ் எடுத்துக்கோங்க. அப்டியே கால்ல சாக்ஸ் போட்டுக்கோங்க. சாக்ஸ் எதுக்கா? சூ போடத்தான். சூ எதுக்கா? பதிவை படிச்சிட்டு கம்ப்யூட்டர் மேல வீசி எரிய தான். அதான இப்ப பேசன்?

சரி நாம குவாட்டருக்கு வருவோம். யாருக்கெல்லாம் பிரதமர் ஆகணும்னு ஆசை இருக்கோ அவங்கெல்லாம் கை தூக்குங்க. யாருக்குமே ஆசையிள்ளயா? என்னாது? ஏற்கனவே வீட்ல அப்டிதான் இருக்கீங்களா?

ஒ. கொஸ்டீன் மாத்தி சொல்லிட்டேனா? மன்னிச்சு. 

யாருக்கெல்லாம் பிரபலம் ஆகணுமா அவங்கெல்லாம் கை தூக்குங்க?

அட, எல்லாருக்குமே ஆச இருக்கா? சரி, ப்ராப்ள பதிவர்....... சாரி பிரபல பதிவர் ஆவதற்கு செய்ய வேண்டிய கருமங்கள்.... மறுபடியும் மன்னிச்சு... காரியங்கள்

1.   நீங்க பிரபல பதிவர் ஆகணும்னா அதுக்கு மொதல்ல பதிவர் ஆகணும். இது ரொம்ப ரொம்ப முக்கியம்.

2.   நாம உண்டு நம்ம வெட்டி வேலை உண்டுன்னு பதிவு எழுத கூடாது. பயபுள்ள ஒருத்தனும் மதிக்க மாட்டாய்ங்க. அதனால யாரையாச்சும் திட்டி உள்குத்து வெளிக்குத்து நேர்குத்து கும்மாங்குத்து பதிவா போடனும். அப்ப தான் ஹிட் கிடைக்கும்.

3.  உள்குத்து பதிவு போடறப்ப யாராவது நாம யாருக்கு உள்குத்து போட்டிருக்கோம்னு கண்டுபிடிச்சாலும் இல்லைன்னு சாதிக்கணும். (ஆனா கடைசில ஆரு மனசுல ஆருன்குற மாதிரி உண்மையை கண்டுபுடிச்சிடுவாங்க. அத கண்டுக்காதீங்க)

4.  நாம யாரை திட்டி பதிவு போட்டோமா அவங்க ப்லாக்லேயே போய் "நல்ல எழுதிருக்கீங்க நன்றி" அப்டீன்னு கொம்மென்ட் போடணும்.

5.  நீங்க உடனே பேமஸ் ஆகணும்னா நல்லா இருக்குற ரெண்டு கூட்டத்தை கலைக்கிற மாதிரி பதிவு எழுதணும். பார் எக்சாம்பிள் ரெண்டு மதத்துக்காரங்க இல்லைனா ரெண்டு நாட்டுக்காரங்கள. அவங்க ரத்தமெல்லாம் சூடாகுற மாதிரி பதிவு போடனும். 

6.  அவங்க நல்ல சண்டை போடும் பொது "சண்டையை ஆரம்பிச்சது அவங்க தான்" அப்டீன்னு நல்லபுள்ள கொம்மென்ட் போடனும். அதையும் நம்புரதுக்கு நெறைய அப்பாவிங்க இருக்காங்க.

7.  ரெண்டு மூணு நாள் ஆயியும் சண்டை நிக்களைன்னா "மன்னிச்சு. பிரச்சனை வேணாம். சமாதானம்" அப்டீன்னு சொல்லி அதை முடிச்சிட்டு இன்னொரு சண்டையை ஆரம்பிக்கணும். இப்படி வாரம் ரெண்டு சண்டையை மூட்டினா தான் நாம நிம்மதியா தூங்க முடியும்.

8. எப்போதும் சண்டை போட்டா யாரும் வர மாட்டாங்க. அதனால அசிங்க அசிங்கமா தலைப்பு போட்டு ஆபாசமா நிறைய பதிவு எழுதணும். அப்ப தான் வருவாங்க. யாராச்சும் கேட்டாங்கன்னா "பதிவுல அசிங்கம் இல்ல. ஒங்க மனசுல தான் இருக்கு"ன்னு பிளேட்டை மாத்திடனும்.


இன்னும் நிறைய ஐடியாக்கள் இருக்கு. ஒன்னொன்னா சொல்லி தாரேன்.

ஐடியாக்கள் அபாயம்: அண்ணன் தூள் நட்சத்திரம்

************************************************************************************

Bean-நவீன-த்தூ-வம்: மசாலா போட்டு வறுத்தால் மசாலா வடை கிடைக்கும். ஆனால் ஆமையை போட்டு வறுத்தால் ஆமைக்கறி தான் கிடைக்கும், ஆமை வடை கிடைக்காது.


என்னிக்குமே கொலைவெறியுடன்

மொக்கை முனி!

4 comments:

  1. பிரபல பதிவர் ஆவது எப்படி?

    இப்படித்தானா!!!!!!1

    ReplyDelete
  2. அண்ணே, பின்னீட்டீங்க!

    ReplyDelete